Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்கின்றது: கனடா குற்றச்சாட்டு

இலங்கையில் குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்கின்றது: கனடா குற்றச்சாட்டு


இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக கனடா குற்றம் சுமத்தியுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர் மாநாட்டில் பங்கேற்ற கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 68ம் பொதுச் சபைக் கூட்டத்திற்கு சமாந்திரமாக இந்த மாநாடு நடைபெற்றது. கனேடிய அரசாங்கத்தின் இலங்கை குறித்த நிலைப்பாடு தெளிவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காத உறுப்பு நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாரிய யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக உரிய விசாரணைகள் இதுவரையில் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் உரிய வகையில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்து இலங்கை மனித உரிமைகளை மேம்படுத்தத் தவறினால் அமர்வுகளில் முழுமையான பங்களிப்பை வழங்க முடியாது என பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் ஏற்கனவே தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் துரதிஸ்டவசமாக இலங்கையில் எதிர்பார்த்தளவு மாற்றங்கள் இதுவரையில் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் கனடா, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் முழுப் பங்களிப்பையும் வழங்குமா என்பது கேள்விக்குறியே என ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments