மட்டு மயிலம்பாவெளியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஈஸ் லகுன் நட்சத்திர விடுதியில் கடமையாற்றும் நிரோசன் சம்பவ இடத்திலே உயிரிழப்பு
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்றைய தினம் அதிகாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகரில் இருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த மோட்டார்சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கொங்கிரிட் தூணில் மோதியதில் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ஈஸ் லகுன் நட்சத்திர விடுதியில் கடமையாற்றும் நிரோசன் என தெரிவிக்கப்படுகிறது
இளைஞன் ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்று தனது நண்பனை வீட்டில் விட்டுவிட்டு , மீண்டும் ஏறாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments