Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் - 2026

 


புதிய கல்விச் சீர்திருத்தங்கள் - 2026

******************************


இச்சீர்திருத்தமானது 5 தூண்களின் ( Pillars) கீழ் முன்னெடுக்கப்படுகிறது.


1.  பாடங்களின் கலைத்திட்ட மறுசீரமைப்பும்  அபிவிருத்தியும்


2.  வளவாளர் பயிற்சியும் ஆசிரிய பயிற்சியும்


3.   நிருவாக மறுசீரமைப்பும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியும்


4.  கணிப்பீடும் மதிப்பீடும்


5.  சமூக விழிப்பூட்டலும் பிரசாரமும்


என்பன அந்த 5 தூண்களும் ஆகும்.


ஆரம்ப கல்வியின் பாடங்கள்

*********************************

I.  தமிழ் (வாசிப்பு நூலும் செயல் நூலும்)

II. ஆங்கிலம்

Iii. இரண்டாம் தேசிய மொழி

Iv. கணிதம்

V. சமயமும் விழுமிய கல்வியும்

Vi. அடிப்படை விஞ்ஞானமும் சுற்றாடல் சார்ந்த செயல்பாடும்.

Vii. ஒன்றிணைந்த அழகியல்

Viii. சுகாதாரமும் உடற்கல்வி யும்.

IX. இணைப்பாட விதான செயற்பாடுகள்


ஆரம்ப பிரிவுகள் தற்போது உள்ளது போலவே முதன்மை நிலைகள் கொண்டிருக்கும்.


இடைநிலைக் கல்வி

************************

மொடியூல் முறையும் GPA முறையும் தரம் 6 தொடக்கம் தடைமுறைக்கு வருகிறது.


35 CREDITS

************

தரம் 6-9 வரை 14 பாடங்கள் காணப்படும்.


அத்தியாவசிய (Essential subjects) பாடங்கள் 14க்கும் விளையாட்டு மற்றும் மாணவர் சங்கங்கள் மற்றும் கழகங்களின் பங்குபற்றலுக்குமாக 30 கிறெடிட்கள் (30 credits) வழங்கப்படும்.


தொடருறு கல்விக்கு வழிப்படுத்தும் மொடியூல் செயற்பாட்டுக்காக ஒவ்வொரு தவணைக்கும் 3 கிறெடிட்கள் (03 credits) கிடைக்கும்.


வாழ்க்கைத் தேர்ச்சியுடன் கூடிய பன்முனைத்திறன்களுக்காக (Transversal skills) 2 கிறெடிட்கள் (2 credits) கிடைக்கும்.


க. பொ.த (சா/த) பரீட்சைக்கு வரலாறு கட்டாய பாடமில்லை. ஆனால் தெரிவுப் பாடமாக (Elective subject) வருகிறது.


30 கிறெடிட்களுக்குரிய பாடங்கள்

***************************************

1.தமிழ் மொழி

2.ஆங்கில மொழி

3.சிங்கள மொழி (இரண்டாம் தேசிய மொழி)

4. கணிதம்

5.விஞ்ஞானம்

6.சுகாதாரமும் உடற்கல்வி யும்

7. ICT

8.வாழ்க்கைக்கான தொழினுட்பம்

9.புவியியல்

10.வரலாறு

11. குடியுரிமை கல்வி

12. சமயமும் விழுமிய கல்வியும்

13. அழகியல் கல்வி

14. முயற்சியாண்மையும்  நிதிசார் எழுத்தறிவும்

15. விளையாட்டு மற்றும் சங்கங்கள் கழகங்களில் பங்குபற்றுதல் (participation only)


03 கிறெடிட்களுக்குரிய பாடங்கள்

***************************************

தொடருறு கல்வி அல்லது உயர்கல்வி நோக்கிய சரியான துறையை நோக்கி மாணவர்களை வழிகாட்டும் வகையில் தமது பிரதேசத்தில் செய்யக்கூடிய தொழில் சந்தைக்கு பொருந்தும் விதமாக ஒவ்வொரு அத்தியாவசிய பாடத்துடனும் தொடர்புடையதாக ஆனால் தவணைக்கு எனும் அடிப்படையில் இதற்கான மொடியூல் 03 கிறெடிட்களுக்காக அமைகிறது.


02 கிறெடிட்களுக்குரிய பாடங்கள்

***************************************

பின்வரும் 09 பாடங்களிலிருந்து விருப்பமான 02 பாடங்களை மட்டும் தெரிவு செய்ய வேண்டும்.


1.இலக்கிய நயம்

2.ஊடக கற்கை (தரம் 8 தொடக்கம் களத்தரிசிப்புக்கள் அவசியம்)

3.சேவைத்துறைக் கல்வி 

4.உலகளாவிய போக்கு கல்வி பற்றிய கல்வி

5.சமூக சேவை

6.சுகாதாரமும் விளையாட்டும்

7.அழகியல் நயம்

8.தொழிலுக்கான ஆயத்தப் படுத்தல்

9.எண்ணிம குடியியல்


தரம் 9 ல் மாணவர்களுக்கு தேசிய அளவிலான பரீட்சை பரீட்சை திணைக்களத்தால் நடத்தப்படுவதுடன் மாகாண/ வலய மட்டத்தில் உளப்பாங்கு (Psychometric) பரீட்சையும் நடத்தப்படும். 


இந்த உளப்பாங்குப் பரீட்சை Skill test எனப்படுகிறது.


தரம் 10 (2028) தொடக்கம் - 35 கிறெடிட்கள்

***********************************************

கட்டாய பாடங்கள் 5 (18 credits)

தொடருறு கல்விக்கான பாடங்கள் 2  (14 credits)

வாழக்கைத்திறன்கள் ( 03 credits)


அத்தியாவசிய பாடங்கள்

Essential Subjects (14 credits)

*****************************

1. தமிழ் மொழி

2.ஆங்கில மொழி

3.கணிதம்

4.விஞ்ஞானம்

5.சமயமும் விழுமிய கல்வியும்

( இப்பாடத்துக்கு 2 credits மற்றையவற்றுக்கு தலா 03 credts)


தெரிவும் பாடங்கள் 2

Two Elective Subjects

************************

பின்வரும் பாடஙாகளில் இருந்த 2 பாடங்களை மட்டும் மாணவர் தரம் 10ல் தெரிவு செய்வார்.

 *  இரண்டாம் தேசிய மொழி

 * ICT

 * வரலாறு

 * குடியுரிமை கண்கலங்கி

 * சுகாதாரமும் உடற்கல்வியும்


 * தொழினுட்பம் (பின்வருவனவற்றுள் ஒன்று: விவசாய முகாமைத்துவ தொழினுட்பம், வடிவமைப்பும் பொறியியல் தொழினுட்ப மும், உணவு மற்றும் நுகர்வுக் தொழினுட்பம், சித்திர வேலைப்பாடுகள் உற்பத்தி கைத்தொழில், நீரக உயிர்வளி தொழினுட்பம்)


* புவியியல்

* அழகியல் கல்வி (தற்போதைய அழகியல் பாடங்கள் உள்ளன)

* முயற்சியாண்மையும் நிதிசார் அறிவும்


மேலுள்ள 7 பாடங்களுக்கு மேலதிகமாக மேலும் 7 பாடங்களை மாணவர்கள் தெரிவு செய்து கற்க வேண்டும். Essential Subject  பாடங்கள் 7க்கு மட்டும் இலங்கை பரீட்சை திணைக்களம் இப்போது நடத்துவது போன்று பரீட்சையை நடத்தும். ஆனால்  மேலதிக பாடங்கள் 7 க்கும் பரீட்சை திணைக்களம் பரீட்சையை நடத்தாது. மாகாண/ வலய மட்ட பரீட்சை நடைபெறும். இது மாணவரின் சித்தி வீதத்தை பாதிக்காது. ஆனால் உயர்கல்வி பற்றிய தெரிவு எதுவென்பதை உறுதிப்படுத்தும்.


மேலதிக பாடங்கள் பின்வருமாறு 4 தொகுதிகளாக உள்ளன.


வகை -1. STEM  (13 பாடங்களில் 4 ஐ தெரிவு செய்ய வேண்டும்.)

******************************

* பிரயோக கணிதம்

* தூய கணிதம்

* உயிரியல்

* இரசாயனவியல்

* பௌதிகவியல்


* சுகாதாரமும் உடற்கல்வி யும்

* கொம்பியூட்டர் சையன்ஸ்

* டேட்டா சைன்ஸ்

* விவசாய விஞ்ஞானம்

* பொறியியல் தொழினுட்பம்

* உயிர்ப் பொறியியல் தொழினுட்பம்

* உணவு நுகர்வோர் தொழினுட்பம்

* விமானப் போக்குவரத்து கல்வி


வகை 2: மனிதநேயமும.சமூக விஞ்ஞானமும்

**********************************

* மொழியும் இலக்கியமும்

* ஊடகமும் தொடர்பாடலும்

* வெளிநாட்டு மொழிகள்

* செம்மொழி கள்

* குடியுரிமைக்கல்வி

* வரலாறு

* புவியியல்

* சமூக விஞ்ஞானம்

* தர்க்கவியல்

* அழகியல் பாடங்கள் (தற்போதைய)


வகை 3: முகாமைத்துவமும் முயற்சியாண்மையும்

**********************************

* பொருளியல்

* கணிதம்

* ICT

* கணக்கீடு

* வணிக கல்வி

* வணிக புள்ளி வபரவியல்

* முயற்சியால் மையும் நிதிசார் அறிவும்

* வழங்கல் சுழற்சி முகாமைத்துவம்


வகை 4: திறன் பாதை

*************************

* நிர்மாணமும் உட்கட்டமைப்பும்

* புத்தாக்க கைத்தொழில்

* ஆரம்ப கைத்தொழில்

* சமூக சேவை

* உற்பத்தி தொழினுட்பம்


வகை 1ல்  விரும்பிய 4 பாடங்களை எல்லோரும் கற்க வேண்டும். வகை 2, வகை 3 ஆகிய வகைகளில் ஏதாவது ஒரு வகைக்குள் மட்டும் சென்று 2 பாடங்களை மட்டும் கற்க வேண்டும். வகை 4ல் ஒரு பாடத்தை எடுக்க வேண்டும். இவ்வாறு இந்த 7 பாடங்களும் அமையும்.


க.பொ.த (உ/த) 2032

************************

5 பாடத்துறைகள் (5 streams)


3 பாடங்கள்


பொது ஆங்கிலம் & GIT  


சக்தியூட்டும் மொடியூல்- தமது பாடத்துறை க்கு வலுச்சேர்க்கும் விதமாக Balance personality ஐ உருவாக்குவதற்காக அப்பாடத்துறையில் அல்லாத மொடியூல்களை மாணவர்கள் தெரிவு செய்து கற்க வேண்டும்.


உயர்தர பாடத்துறைகள் (Subject streams) பின்வருமாறு அமையும்.

*********************************************

Science stream

Technology stream

Management & Enterpreunership

Humanities & Social Sciences

Vocational Path 

50 நிமிட பாடவேளை கொண்ட 7 பாடவேளைகள் ஒரு நாளுக்கு அமையும். இதனால் பாடசாலை நேரம் தற்போதுள்ள தை விட 30 நிமிடங்கள் அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments