Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு – CID விசாரணை

 


கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து மூன்று மொழிகளிலும் குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த வினாத்தாளுக்கான பரீட்சை இடம்பெறவுள்ள புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments