வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (10) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்த மருத்துவ சேவைகள் கூட்டு முன்னணி தீர்மானித்துள்ளது.
10 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை, மத்திய இரத்த வங்கி மற்றும் மனநல நிறுவனம் போன்றவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வைத்தியர்களுக்கான Disturbance, Availability & Transport (DAT) கொடுப்பனவை 35,000 ரூபாயால் உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வைத்திய ஊழியர்கள் நேற்று அரசு வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
0 comments: