Advertisement

Responsive Advertisement

எதிர்காலத்தில் பல பொருட்களின் விலை குறைக்கப்படும்

 


எதிர்காலத்தில் பல பொருட்களின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதனால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் சில தினங்களில் 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை சுமார் 300 ரூபாவினால் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று நாட்களில் நுகர்வோருக்கு இந்த நிவாரணங்கள் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

நிர்மாணத்துறை சார்பில் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையே இந்த நிவாரணங்களை பெறுவதற்கு காரணம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமாகி வருவதாகவும், நுகர்வோருக்கு எப்போதும் நிவாரணம் வழங்குவதாகவும் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments