Advertisement

Responsive Advertisement

ஜூலையில் பஸ் கட்டணத்தில் மாற்றம்?

 


எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பஸ் கட்டண மீளாய்வின் போது பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வருட எரிபொருள் விலை திருத்தத்தில் டீசல் விலையில் குறைப்பு இல்லையென்றாலும் கடந்த மாதம் டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பஸ் கட்டணத்தை திருத்த தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

மேலும் பொருட்களின் விலைகள், உதிரி பாகங்களின் விலைகள் மற்றும் இதர பொருட்களின் விலைகள் கணக்கிடப்பட்டு, எதிர்வரும் ஜூலை முதாம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments