களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் கடந்த சிலதினங்களுக்குமுன் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த செட்டிபாளையத்தை சேர்ந்த 3 பேரில் இரண்டு குடும்பஸ்த்தர்கள் உயிரிழந்துள்ளமை அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
கடந்த 5 தினங்களுக்கு முன் மட்டு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்துக்கு அருகாமையில் செட்டிபாளையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும் மட்டக்களப்பு பக்கமிருந்து செட்டிபாளையம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும் நேர் எதிர் மோதிக்கொண்டதில் மோட்டார்சைக்கிள்களில் பயணித்த செட்டிபாளையத்தை சேர்ந்த இரண்டு குடும்பஸ்த்தர்களும் ஒரு சிறுவனும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இரண்டு குடும்பஸ்த்தர்களும் நேற்று முன்தினமும் இன்றைய தினமும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: