Home » » A/L பரீட்சை: மேலும் 8 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பம்.

A/L பரீட்சை: மேலும் 8 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பம்.



08-05-2053

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலைத்தேய சங்கீதம் மற்றும் ஹிந்தி பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் 08 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்றைய தினம்(08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த விடைத்தாள்கள், வௌி மாகாணங்களில் அமைந்துள்ள 10 மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் இணைவதற்கு தீர்மானித்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் தெரிவித்திருந்தது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 02 மாதங்களுக்கு அதிக காலம், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திடுங்கள்.


https://chat.whatsapp.com/Lb3JH83r7Ec8lBYTf3R8x6


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |