Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் : நளின் பெர்னாண்டோ!

 


அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் பிரகாரம் நாட்டின் நிதி ஒழுங்குமுறை தீர்மானங்களின் அடிப்படையில் அபிவிருத்திப் பணிகளுக்கு பணம் விடுவிக்கப்படவில்லை

எவ்வாறாயினும் அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து வருவாய் ஈட்டும் பணிகளுக்குத் தேவையான பணத்தை விடுவிப்பதற்குத் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான பணத்தை விடுவிக்க வேண்டும் என்றும் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரம் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments