Advertisement

Responsive Advertisement

பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து கொள்ளை : இருவர் கைது!

 


கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் சிலர்  பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக  மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து  10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 ,36 வயதுடைய ஹம்பாந்தோட்டை மற்றும் பல்லேவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து 83 கையடக்கத் தொலைபேசிகள், 4 டெப் இயந்திரங்கள் மற்றும் 5 மடிக்கணினிகள் மீட்கப்பட்டுள்ளன.

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments