Home » » நடுக்காட்டில் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட முன்னாள் போராளி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!

நடுக்காட்டில் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட முன்னாள் போராளி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!


மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் கடந்த புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் போராளி தொடர்பான விடயங்கள் முற்றிலும் பொய் என அவரது குடும்பத்தினர் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

காட்டிலிருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளியின் சகோதரியும் அவரது மருமகனுமே இன்றைய தினம் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள், 

“அவர் நடுக்காட்டில் தங்கியிருக்கவில்லை. எங்களுக்கு சொந்தமான இடத்திலேயே அவர் தங்கியிருந்தார். அதுமட்டுமன்றி, அவர் தங்குவதற்கான கொட்டகையையும் நாங்களே அமைத்துக்கொடுத்தோம்.

பொய்யான தகவல்

நடுக்காட்டில் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட முன்னாள் போராளி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்! | Ltte Ex Militant Rescued From The Jungle Media

அதேவேளை, அவருக்கு சமையலுக்குத் தேவையான உணவுப்பொருட்களையும் நாங்களே ஒவ்வொரு வாரமும் கொடுத்து வருகின்றோம். அவரை எங்களது வீட்டில் தங்க வைப்பதற்காக பல தடவைகள் முயற்சி செய்தும் அவர் அதற்கு சம்மதிக்காது தனியாகவே வாழ்ந்து வந்தார்.

இவ்வாறான நிலையில், அவர் காடுகளில் இருக்கும் காய்களையும், பழங்களையும் உண்டு வாழ்ந்து வந்தார், அவர் கவனிப்பார் அற்று இருக்கின்றார். மனநலம் பாதித்துள்ளார் எனக் கூறி பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதால் நாம் தான் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.

மேலும், அவர் முன்னாள் பேராளி என்றும் அவரைப் பராமரிப்பதற்காக வெளிநாடுகளில் பலர் பணம் சேகரித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறான செயற்பாடுகளில் யாரும் ,ஈடுபட வேண்டாம்.

பணம் சம்பாதிக்கும் முயற்சி

நடுக்காட்டில் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட முன்னாள் போராளி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்! | Ltte Ex Militant Rescued From The Jungle Media

அவரை வைத்து சிலர் பணம் சம்பாதிக்க நினைக்கின்றார்கள். தற்போதும் அவரைப் பராமரிப்பதற்காக தினமும் மூவாயிரம் ரூபா பணம் பராமரிப்பவருக்கு வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில், வெளிநாட்டில் இருப்போர் அவர் தொடர்பில் தகவல் எதுவும் அறிய வேண்டுமாயின் எமது கிராமசேவகர் ஊடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். தங்களிற்கு தேவையான விடயங்களை உண்மை நிலையை நாம் கூறுவோம்” எனவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர், முன்னாள் போராளியான பாலா எனவும், கடந்த 4 வருடங்களாக இவர் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, மனநலம் குன்றிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை அணுகியுள்ளனர். இவர்களைக் கண்டதும் பாலா கட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவார்.

அதனையடுத்து அவரை பல நாட்களாக இரவு பகலாக அவதானித்து வந்த நிலையிலேயே கடந்த புதன் கிழமை இவரை ஊர் மக்களும் அதிகாரிகளும் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |