செல்லும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனாலும், பொருளாதார நெருக்கடிச்சூழல் காரணமாகவும் பாடசாலைகளில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மிகவாக குறைவடைந்துள்ளன. இதனால் மாணவர்களின் செயற்பாடும் கற்றல், கற்பித்தல் மட்டுமே என்ற எண்ணத்தினை தோற்றுவித்து வருகின்றன. இது மாணவர்களுக்கு அழுத்தமாகவும் அமையும். இதேவேளை பொதுப்பரீட்சைப் பெறுபேறுதான் வாழ்க்கை அல்லது தகுதி என நினைக்கின்ற மனப்பான்மையும், அப்பெறுபேற்றையே அதிகாரத்தில் உள்ளவர்களும் ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்ப்பதினால் ஆசிரியர்களும் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதனால் மாணவர்களே அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர்.
பெற்றோரின் எதிர்பார்ப்பு, ஆசிரியர்களின் தூண்டுதல் போன்றவற்றினால் மாணவர்களுக்கு மனவிரக்தியை ஏற்படுத்துகின்றது. இவற்றினை இல்லாமல் செய்து மாணவர்களை மனநிலை மாற்றுவதற்கான செயற்பாடுகளாக இணைப்பாடவிதானங்கள் அமைந்துவிடுகின்றன. அவ்வாறான இணைப்பாட விதானங்களை கற்றல், கற்பித்தலுக்கு சமமாக கொண்டு செல்கின்ற போது மாணவர்களின் உளம் மகிழ்ச்சிகரமானதாக எப்போதும் இருந்து கொண்டிருக்கும். வீட்டில் ஏற்படும் பொருளாதார ரீதியான அழுத்தங்களும் பாடசாலைக்கு வருவதன் மூலமாக குறைவடையும்.
பாடசாலைகளை, மாணவர்கள் விரும்பும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டுமே தவிர பாடசாலைகளை மாணவர்கள் வெறுக்கும் நிலையை உண்டுபண்ணக்கூடாது. ஒவ்வொரு மாணவர்களும் திறமையானவர்கள் அவர்களின் ஒட்டுமொத்த திறமைகளையும் மூன்று மணிநேர வினாத்தாளினால் சோதித்து விட முடியாது. அவர்களின் திறமைக்கேற்ற களத்தினை உருவாக்கி அதில் சிறப்புச்தேர்;ச்சி அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர் விரும்பும் மகிழ்ச்சிகர சூழலை பாடசாலையிகளில் ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தமக்கான விருப்ப நிகழ்ச்சிகளை பார்வையிடும் போது அல்லது பங்கேற்கின்ற போது அதில் உள மகிழ்ச்சி கொள்கின்றனர். இதற்கு துணை புரிவது கற்றல், கற்பித்தலுக்கப்பால் அனுபவத்துடனான நிகழ்ச்சிகளும், இணைப்பாட விதானங்களேயாகும். பாடசாலைகளில் தற்போதைக்கு இதுவே தேவையுமாகும். இதற்கேற்ற வாய்ப்புக்களையும், வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
0 comments: