எதிர்வரும் 2023ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சீருடைப் பொதிகளை நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நன்கொடையின் மூலம் நாட்டின் வருடாந்த சீருடை துணி தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
3 மில்லியன் மீற்றர் துணிகள்
நன்கொடையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ள சீருடை துணிகளின் கையிருப்பு மதிப்பு சுமார் 5 பில்லியன் ரூபா என அந்த டுவீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சீருடை மற்றும் ஆடைகளின் முதல் பகுதி ஜனவரி 6 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.
20 துணி கொள்கலன்கள் பொதி செய்யப்பட்டுள்ளதாகவும் 3 மில்லியன் மீற்றர் துணிகள் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: