Home » » அனைத்து பெற்றோர்களும் , பிள்ளைகளும் கட்டாயம் படித்துவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்

அனைத்து பெற்றோர்களும் , பிள்ளைகளும் கட்டாயம் படித்துவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்

 


Kurunews.com

26-12-2022


இலங்கை மாணவர்களை ஆக்கிரமித்து உள்ள ஐஸ் போதைப் பொருள் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும்.

*▫️ஐஸ் போதைப் பொருள் என்பதன் சுருக்கமான வரைவிலக்கணம்*

பனிக்கட்டி (ஐஸ் கட்டி) வடிவில் அல்லது பளிங்கு துகள்கள் வடிவில் இருக்கும் இந்தப் போதைப்பொருளின் உண்மையான பெயர் *மெதம் பெடலின்* ஆகும். 

இது ஆய்வகங்களில் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு இரசாயனப் பொருள் ஆகும்.

இது மனிதனின் மைய மூளை நரம்புத்தொகுதியினைத் தூண்டி *தற்காலிகமான ஒரு இன்பத்தை வழங்கும்*


இந்தப் போதைப் பொருளின் மிகக்கொடிய ஒரு தன்மை என்னவென்றால் இதனை *ஒரு தடவை நுகர்ந்தாலும் அதனுள் இருந்து மீள முடியாமல் போய் விடும்* என்பதாகும்

*▫️ஐஸ்  பாவனைக்கு உள்ளாவதன் கொடிய விளைவுகள் என்ன?*

• வயது வித்தியாசம் இன்றி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விட நேரிடும்

• வாழ்க்கை வெறுத்து, நிதானம் தவறிய நிலைக்கு தள்ளப்பட்டு சிறுபிள்ளை செய்யும் வேலை ஒன்றைக் கூட செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படும்.

•தொடர்ந்து பல நாட்கள் தூக்கம் இல்லாமல் சென்று , மீண்டும் தொடர்ந்து பல நாட்கள் தொடர்தூக்கத்தில் இருக்க நேரிடும்

•வழமையாக இருக்கும் உடல் எடை தீவிரமாக குறைந்து மோஷமான உடல் தோற்றத்தை உருவாக்கும்.

•பற்கள்  அனைத்தும் கரை படிந்து, உருக்குலைந்து அருவருக்கத்தக்க தோற்றத்தை உருவாக்கும்.

•இரத்தபந்த உறவுகளை கூட அடையாளம் தெரியாமல் சென்று  ஆன் பெண் வேறுபாடு இல்லாமல் , வயது வித்தியாசம் பார்க்காமல் நடந்துகொள்ளும் கொடூர மிருகங்கள் போல் நடவடிக்கைகள்  மாற்றமடையும்.

• இறுதியில் தன்னை தானே தாக்கிக்கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டு வாழ்க்கையை முடிக்க நேரிடும்.

*🔴உங்கள் பிள்ளைகள் இந்தப் பாவனைக்கு உள்ளாகி இருப்பார்களா❓*

• உடல் எடையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் *உஷார் ஆகுங்கள்‼️*

•உடல் தோற்றங்களில் அக்கறை காட்டாத விதத்தில் நடந்து கொண்டால் *உஷார் ஆகுங்கள்‼️*

•வழமைக்கு மாற்றமான செயல் நடத்தைகளை அவதானித்தால் *உஷார் ஆகுங்கள்‼️*

•காரணம் இல்லாமல் சிரித்தல்,  காரணம் இல்லாமல் பேசுதல் போன்ற நடவடிக்கைகள் தென்பட்டால்  *உஷார் ஆகுங்கள்‼️*

•எக்காரணமும் இன்றி தீவிரமாக உடல் வியர்த்தால்  *உஷார் ஆகுங்கள்‼️*

•கண்களை வேகமாக அசைத்தால் அல்லது கண்கள் அரைவாசி மூடியது போன்று சிவந்து காணப்பட்டால்  *உஷார் ஆகுங்கள்‼️*

•வழமைக்கு மாற்றமாக உணவுகளில் விருப்பமின்றி நடந்தால்  *உஷார் ஆகுங்கள்‼️*

*எனது மகன், மகள் தவறு மாற்றாங்கள் என்ற குருட்டு நம்பிக்கையை விட்டு உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க எச்சரிக்கையுடன் இருங்கள்*

 

NURSERY செல்லும் மாணவர்கள் முதல் உயர்தரங்கள் கற்கும் மாணவர்கள் வரை அனைவரும் இலக்கு வைக்கப்பட்டு உள்ளனர்

போதைப் பொருள்  என்று தெரியாமல் கூட உங்கள் பிள்ளைகளில் உடலிற்கு செல்வததற்கான வாய்ப்புக்கள் ஏராளம் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

*பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்❓*

▫️தயவு செய்து வீட்டு உணவுகளை மாத்திரம் பாடசாலைக்கு கொடுத்து அனுப்புங்கள்.


*பாடசாலை சிற்றுண்டிககளில் கூட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.*

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக  எவரும் எதையும் செய்யலாம் என்ற நிலைமை உருவாகி உள்ளது. தயவு செய்து இந்த விடயத்தில் எவர்களையும் நம்ப வேண்டாம். 

▫️பகுதி நேர வகுப்புக்கள் அனைத்தையும் தீவிரமாக கண்காணிப்பு செய்யுங்கள் .

▫️வீட்டு ,வகுப்பறை குப்பைத் தொட்டிகளை அடிக்கடி பரிசோதனை செய்யுங்கள்,கண்ணாடி குழாய்கள், மூடி இல்லாத பேனா,எரித்த பத்திரிகை ,மூடி இல்லாத லைட்டர் போன்றவைகள் தென்பட்டால் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

▫️பிள்ளைகளுடன் அதிக நெருக்கத்தை உருவாக்குங்கள்

▫️செல்போனின் செயற்பாடுகள் என்றும் உங்கள் கண்காணிப்பில் இருக்கக் கூடியதாக அமைத்து வையுங்கள்.


▫️காரணம் இன்றி பணம் கொடுப்பதை முற்று முழுதாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.

*பெண்பிள்ளைகள் அதிகமாக இலக்கு வைக்கப்பட்டு உள்ளதோடு, பாதிக்கபட்டும் உள்ளனர் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.*

*போதைப் பொருளுடன் தொடர்புடையவர்கள் என இவரை சந்தேகித்தாலும் உடனடியாக உரிய தரப்பினருக்கு தகவல் வழங்குங்கள்*

கிட்டத்தட்ட உங்கள் கழுத்தில் சுருக்கு விழுந்தமாதிரியான ஒரு பரிதாபமான ஒரு நிலைதான் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள், கொடிய பிடியிலிருந்து எமது சமூகத்தை காப்பாற்றுங்கள்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |