இன்றைய தினத்துடன் ஓய்வுபெறவுள்ள தொடருந்து சேவை ஊழியர்களை, தேவை ஏற்படும் பட்சத்தில், அத்தியாவசிய சேவை என்ற விதத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு அதிபர் செயலகம், இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.
அரச சேவையிலுள்ள 30,000திற்கும் அதிகமானோர் இன்றுடன், ஓய்வூ பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் புதிய ஓய்வூதிய கொள்கைக்கு அமைய, 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து அரச ஊழியர்களும் ஓய்வூ பெறவுள்ளனர்.
பெருந்தொகையான அரச ஊழியர்கள்
அரச நிர்வாக சேவை, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகள், முப்படை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் கடமையாற்றும் அரச ஊழியர்களே இவ்வாறு ஓய்வூ பெறவுள்ளனர்.
இந்தளவிலான பெருந்தொகையான அரச ஊழியர்கள், ஒரே நேரத்தில் ஓய்வூ பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
0 comments: