Home » » ஆசிரியர்களின் உடை முறைமையில் மாற்றமில்லை

ஆசிரியர்களின் உடை முறைமையில் மாற்றமில்லை

 


08-11-2022.


ஆசிரியைகள் , ஆசிரியர்களின் உடை முறைமையிலேயே அல்லது மாணவர்களின் சீருடை முறைமையிலோ எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளப்போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

இலங்கையில் கல்வி முறைமை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து ஆசியரியர்கள் சேலையையே அணிகின்றனர்.

இஸ்லாமிய ஆசிரியைகள் சேலையை அணித்து தலைக்கு பர்தாவை அணிகின்றனர்.

இதுவரை ஆசிரியர்களின் உடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சீருடையில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ள போவதில்லை என விவேகானந்தா பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தேன்.

அங்கு வருகைதந்திருந்த 300 முதல் 400 வரையிலான பெண்கள் அதற்கு பாரிய கரகோசத்தினை தந்து ஆதரித்தனர்.

தமிழர்கள்,  கலாசாரம் அழிந்துவிடக்கூடாது என்பதிலும், சேலையே ஆசிரியைகளுக்கான உரிய உடை எனவும் அவர்கள் எடுத்துணர்தியதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஆகையினால் ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உடை முறைமையில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்போவதில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார்.

அத்துடன், போதை பொருள் ஒழிப்பு மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பில் கொழும்பு மாவட்டத்திலுள்ள 144 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆலோசனை வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியிலும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |