Advertisement

Responsive Advertisement

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு

 


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குஜ்ரன்வாலாவில் (Gujranwala) நடைபெற்ற பேரணியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்ரான் கானின் காலில் துப்பாக்கிச் சூடு பட்டதாகவும், அவருக்கு ஆபத்தில்லை என்றும், அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலை நடத்தக் கோரி பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments