Advertisement

Responsive Advertisement

மாணவர்களின் உணவுக்காக 5500 மெற்றிக் தொன் அரிசியும் , 3 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன : சீன தூதரகம் !

 


பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கடந்த ஐந்து மாதங்களில் வழங்கப்பட்ட ஆதரவு குறித்து சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.


பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக 5500 மெற்றிக் தொன் அரிசியும் 3 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம், அத்துடன் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான 70 சதவீத உத்தியோகபூர்வ சீருடைகள் எதிர்காலத்தில் வழங்கப்படும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments