அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த ஹங்வெல்லயை சேர்ந்த பல்பொருள் அங்காடிக்கு 20 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர, அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த தெமட்டகொடையை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது, அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 250 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
முட்டைக்கான நிர்ணய விலையை அறிவித்து, அண்மையில் வர்த்தமானி வௌியிடப்பட்டது.
அதற்கமைய, வௌ்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லரை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை 45 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிர்ணய விலைக்கு அதிகமாக முட்டை விற்பனையில் ஈடுபடுவோர் தொடர்பில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
0 comments: