உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அடுத்த வருடம் முதல் தரம் ஒன்றிலிருந்து குழந்தைகளுக்கு ஆங்கில மொழி மூலமான கல்வியை கற்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (ஒக்டோபர் 3) வாய்மூல கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அடுத்த ஆண்டு, முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, முதல் வகுப்பிலிருந்தே நடைமுறையில் ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். ” என தெரிவித்தார்.
0 comments: