Home » » OceanBiome அமைப்பின் கடல் சுற்றுப்புறச் சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறுபட்ட வேலை திட்டங்களை உருவாக்கி செயற்படடுத்தும் நோக்கில் இலங்கையைச் சுற்றிவரும் இரு மட்டக்களப்பு இளைஞர்கள்

OceanBiome அமைப்பின் கடல் சுற்றுப்புறச் சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறுபட்ட வேலை திட்டங்களை உருவாக்கி செயற்படடுத்தும் நோக்கில் இலங்கையைச் சுற்றிவரும் இரு மட்டக்களப்பு இளைஞர்கள்



எமது நல்ல செயற்பாடுகள் எங்கோ ஏதோ ஒருவரை சென்றடைதல் என்பதும் அதனூடாக நிகழும் மாற்றங்களுமே அதற்குச் சான்று, சைக்கிலோட்டிகளின் செயற் பாடுகளால்  தூண்டப் பட்டவர்களில் இந்த இரு இளைஞர்களும் அடக்கம்.









நேற்றைய நாளில் (01.09.2022) சைக்கிளால் நாட்டின் கரையோர மாவட்டங்களை குறிக்கோளோடு சுற்றிவர புறப்பட்டிருக்கும் இரு இளைஞர்களின் விபரம் இது.

“OceanBiome”🌊.

OceanBiome அமைப்பின் இரண்டு சைக்கிலோட்டி இளைஞர்கள் 11 நாட்கள் கொண்ட நீண்ட சைக்கிள் சவாரியை "Ocean Ride" எனும் கருப்பொருளில் பணிக்கிறார்கள். இப்பபயணித்தின் நோக்கானது....

🔺இது கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும்

🔺கடலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் 

🔺கடல் வளங்களை கையாளும்போது பொறுப்பை உருவாக்குவதற்கும்.


நாட்டின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி வருகின்ற சைக்கிலோட்ட சவாரி ஆகும்.

கடலும் கடல்சார்ந்த இடங்களையும் நேசிக்கின்ற இளைஞர் யுவதிகள்,வெளிநாட்டவர்கள்  என 300 ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களோடு மட்டக்களப்பை மையப்படுத்தி இயங்கிவரும் தன்னார்வ நிறுவனம் “OceanBiome" இந்நிறுனம் திறந்த கண்டுபிடிப்புகள்,மற்றும் கடல்சார் கல்வியறிவு ஆகியவற்றை இணைப்பதன் மூலம் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மிக அழுத்தமான சவால்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்ற பல்வேறுபட்ட திட்டங்களை கொண்டு நம் அடுத்த தலைமுறையை கடல் நேயமிக்க சமூகமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு அவற்றை வெற்றி கொள்வதற்காக 

🔵கல்வி 

🔵தொழில்நுட்பம் 

🔵ஆராய்ச்சி மற்றும் 

🔵வணிகம் 

என்னும் பெரும் 4 துறைகளினூடாக செயற்பட்டு வருகிறது.

கடல் சுற்றுப்புறச் சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறுபட்ட வேலை திட்டங்களை உருவாக்கி அவற்றை

◾️வாரந்தம் 

◾️மாதாந்தம் 

◾️வருடாந்தம் என 

மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அறக்கட்டளைகள் மற்றும் பாடசாலைகளில் மாணவர்களிடையே பேராசிரியர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களின் உதவியோடு 

கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதிக்கும் பிரச்சினைகளை தீர்க்க 

இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான விளக்கங்களை மாணவர்கள் மத்தியில் தெளிவுபடுத்துவதனூடாகவும்.

நாமும் எதிர்கொள்ளும் நம் அடுத்த தலைமுறையினர் எதிர் கொள்ளவிருக்கும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்று கடற் குப்பைகள் மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக்குகளாகும். 

இவை தம் ஆரோக்கியத்திற்கும் சுத்தமான கடலை நம்பியிருக்கும் மனித நடவடிக்கைகளுக்கும் கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என்பதை மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்பபுணர்வுகளினூடாகவும் (plastic awareness session)   தெளிவுபடுத்தி வருகிறது.

மற்றும்

 பாடசாலை மாணவர்களிடையே பாடசாலை சூழலில் காணப்படுகின்ற குப்பைகளை சேகரித்து அவற்றை வேறுபடுத்தி உக்கக்கூடிய,உக்கமுடியாத குப்பைகள் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை வழங்குவதோடு  microplasticகள் நம்பமுடியாத அளவிற்கு நுணுக்கமாக இருந்தாலும் அவை கடல் உயிர்கள் மற்றும் சூழலியல் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர்களிடையே நிரூபிப்பதன் மூலமாகவும் விழிப்புணர்வை மேற்கொண்டும் வருகிறது.


போயா தினங்களில் பிளாஸ்டிக் அற்ற போயா தினம் (plastic free poya day) எனும் தலைப்பில் கடல் மற்றும் கடலை அண்டிய பிரதேசங்களில் அதனை அண்டி வாழும் மக்களின் உதவிகளோடு பிளாஸ்டிக்குகள் மற்றும் அது தொடர்பான குப்பைகளை சேகரிப்பதன் மூலம் கடல் வளத்தை பாதுகாப்பதற்கான வேலை திட்டங்களை  தொடராக செய்து வருகிறது.


இவை மட்டுமல்லாது கடல் வளங்களை பாதுகாப்பதற்கான மிகப் பாரிய வேலைத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன இந்த அமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகளில்  ஒன்றுதான் இன்றைய தினத்தில் ஆரப்பபிக்கப்பட்டுள்ள "OCEAN RIDE" 🚲🚲🚲🚲🚲


இது இன்று அதிகாலை 5 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் "OceanBiome" அங்கத்தவர்களின் ஆதரவோடு இலங்கை கரையோர மாவட்டங்களான 

 மட்டக்களாப்பு

திருகோணமலை

பொத்துவில்

முல்லைத்தீவு

யாழ்ப்பாணம்

புத்தளம்

நீர்கொழும்பு

கிக்கடுவை

அம்பாந்தோட்டை

பொத்துவில்

 ஊடாக மீண்டும் மட்டக்களப்பை வந்தடையும் இப்பயணம்;

🔶 மொத்தம் 1300 கிலோமீட்டர்கள் 

🔶11 நாட்கள் 

🔶2 சைக்கிலோட்டிகள்

சைக்கிலோட்டத்தால் இணைந்த என் சைக்கிள் ஓட்ட நண்பர்களின் 

இந்த சைக்கிள் ஓட்ட சவாரி 

வெற்றியடைய வேண்டியும் 

அதன் நோக்கம் நிறைவடையவும் 

உளமார வாழ்த்தி வழியனுப்பும் RUDERS HUB CYCLING CLUB 

நோக்கம் வெற்றிபெற  வாழ்த்துக்கள் நண்பர்களே.

@சஞ்ஜீவன் அமலநாதன்

@Anamigan kumarasingam


விளையாட்டு எல்லைகளை தாட்டியதும் எங்களை இணைக்கும் சக்தி உடையதுமாகும்.


நன்றி:

 Riders hub சைக்கிலோட்டி

Ameer(M)Aakib

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |