பப்புவா நியூகினியா நாட்டிலிருந்து வலம்புரிச் சங்கை இலங்கைக்கு கொண்டுவந்து அம்பாறை கடையொன்றின் அருகில் ஒரு கோடி ரூபாவுக்கு விற்க முயற்சித்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் பிரகாரம் வலம்புரி விற்பனை செய்ய முயற்சித்த நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சில காலத்துக்கு முன்னர் பப்புவா நியூகினியாவில் பணிபுரிந்தவர் எனவும், பழங்காலப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றிலிருந்து வலம்புரிச் சங்கை திருடி வான் வழியாக கொண்டு வந்ததாகவும் விசாரணையின் போது மேலும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதுடைய ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
0 comments: