இவ் விளையாட்டு தொடர்பான கட்டுரைக்கு செல்லும் முன் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறையால் தொடர்ந்து விளையாட்டு வள பங்கீடு தொடர்பான பகிர்ந்தளிப்பில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படும் களுவாஞ்சிகுடி பிரதேச வீர வீராங்கனைகள் இருக்கின்ற வளங்களை கொண்டு தொடர்ந்து மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட அரசியல் தலைமைகளுக்கும் தங்களது திறமை வெளிப்பாட்டின் மூலம் தக்க பதில் வழங்குகின்றனர். இவ் வெற்றிக்கு பின் புலமாக நின்ற சகலருக்கும் #KADO #NEWS சார்பான வாழ்த்துகள். இதற்கு பிறகாவது களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் மெய்வல்லுனர் விளையாட்டுத்துறையை வளப்படுத்த மாவட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா? இல்லை மாவட்டத்துக்கென வருகின்ற மைதான புனரமைப்புக்கான நிதியை மீண்டும் அரசியல் செல்வாக்கின் மூலம் தங்களது சொந்த பிரதேசங்களுக்கு அல்லது சார்பான பிரதேசங்களுக்கு கொண்டு செல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்
கடந்த சனி ஞாயிறு தினங்களில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற பிரதேச கழகங்களுக்கிடையிலான
மாவட்ட மட்ட விளையாட்டு விழா வின் மெய்வல்லுனர் போட்டிகளில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் மீண்டும் முதலாவது இடத்தினை பெற்று தங்களது மண்ணின் பெருமையினை தக்க வைத்தது.
மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளை பிரதி நிதித்துவ படுத்தி பல கழகங்களை சேர்ந்த 100 க்கு மேற்ப்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்ட விளையாட்டு நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் மீண்டும் முதலாமிடம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வீர வீராங்கனைகளுக்கிடையில் பலத்த போட்டி நிலவிய இம்முறை போட்டிகளில் ம.தெ.எ. பற்று பிரதேச செயலக வீர வீராங்கனைகள்
13 தங்கப்பதக்கங்களையும்🥇, 15 வெள்ளிப் பதக்கங்களையும் 🥈, 05 வெண்கலப்பதக்கங்ளைம் 🥉பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: