Advertisement

Responsive Advertisement

காரைதீவில் அதிகளவில் பிடிபட்ட கிளவல்லா மீன்கள்!

 வி.ரி.சகாாதேவராஜா)

காரைதீவு கடற்கரையில் நேற்று ஆயிரக்கணக்கான கிளவல்லா மற்றும் வளையா மீன்கள் பிடிபட்டன.

கிருஸ்ணபிள்ளை ஜெயவீரா என்ற மீனவருக்குச் சொந்தமான ஆழ் கடல் பாரிய மீன்பிடி படகில் இப்பாரிய பாடு பிடிப்பட்டிருக்கின்றது.

ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் ஜெயவீரா கூறுகையில்.

இன்றைய சமகால பொருளாதார நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் இப்படி பெரு

ந்தொகையான மீன்கள் பிடிபட்டிருப்பது மகிழ்ச்சியானது.

சுமார் ஆறாயிரம் கிலோ மீன்கள் பிடிபட்டன

மொத்த வியாபாரிகள் கிலோ 550 ரூபாய்க்கு கொள்வனவு செய்தார்கள். கருவாடு போடுபவர்கள் கிலோ 200 ரூபாய்க்கு கொள்வனவு செய்தார்கள்.

அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும் மீன்கள் விநியோகிக்கப்பட்டன. என்றார்.
மீன் வாங்குவதற்காக  பொதுமக்களும் கூடிக் காணப்பட்டனர்.

கடலுக்குள் இருந்து இந்த மீன்களை கரைக்கு கொண்டு வருவதற்கு எட்டு மணித்தியாலங்கள் எடுத்தது .அதாவது காலை 6 மணி இருந்து பிற்பகல் 2 மணி வரைக்கும் மீனவர்கள் மீன்களை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







Post a Comment

0 Comments