Home » » பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தை ஹக் செய்த மாணவர் கைது !

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தை ஹக் செய்த மாணவர் கைது !

 


பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய (ஹக் செய்த) காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மாணவர் இணையத்தளத்தை ஹக் செய்து, 2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தரவுகளை மீட்டெடுத்து, அதனை தனியான இணைய முகப்பு காட்சிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஏறக்குறைய 270,000 மாணவர்களின் தரவுகளைத் திருடி அவர்களின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளம் போன்ற இணையத்தளத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐடி மாணவர்களைக் கொண்ட 5000 உறுப்பினர்களைக் கொண்ட தனியார் டெலிகிராம் குழுவில் இணையத்தள முகப்பு மற்றும் ஹக்கிங் குறித்த வழிமுறைகளை மாணவர் பகிர்ந்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு, தந்திரோபாயக் குழுவிற்குள் நுழைந்து அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த மாணவனின் இணைய முகப்பை ஹக் செய்த பின்னர், அதனை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டெலிகிராம் குழுவிற்கு அவர் அறிவித்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் காலியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த மாணவர் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதற்காக அரசாங்க இணையத்தளத்தை ஹக் செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |