Advertisement

Responsive Advertisement

அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு; ஆனால் இவர்களுக்கு இல்லை

 


அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆகக் குறைக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த வயது வரம்பு பாதிப்பை ஏற்படுத்தாது என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே மருத்துவம், தாதியர், பொறியியல் உள்ளிட்ட பல தொழில்கள் அந்த வரம்பிலிருந்து நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்தொழில்களில் ஈடுபடுபவர்கள் 63 வயது வரை பணியாற்றக்கூடிய வகையில் அமைச்சரவையில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய குழுவினர் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ள மாயாதுன்னே, இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் பதினைந்து நாட்களுக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி இந்த ஆண்டு இறுதியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments