Advertisement

Responsive Advertisement

இரு கிராமங்களுக்கு இடையே 4 நாட்களாக மோதல் ! ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன.

 


பருத்தித்துறை - துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாட்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன.


இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 இற்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வாள்கள், கற்கள் மற்றும் போத்தல்களினால் மோதல்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 7 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன் காரணமாக சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments