இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 115 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது; 120 பேர் ஆதரவாகவும் 05 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 43 பேர் வாக்களிப்பிலிருந்து விலகினர்-
2022 இடைக்கால பாதீடு இரண்டாம் வாசிப்பு - 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
மேலும்
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின் (இடைக்கால பாதீடு) இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பில் ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 43 பேர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அண்மையில் எதிர்க்கட்சியில் இணைந்த ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில், எதிர்வரும் 4 மாதங்களுக்காக இடைக்கால பாதீடு திட்டத்தை, அமைச்சரவை அனுமதியுடன் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைத்து, உரையாற்றினார்.
இந்நிலையில், நிதியமைச்சரின் இடைக்கால பாதீடு மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் நேற்று, இன்று ஆகிய மூன்று தினங்கள் இடம்பெற்றிருந்தன.
அதற்கமைய, இடைக்கால பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று(2) 5.28 அளவில் ஆரம்பமானது.
0 comments: