0 3-08-2022.*,, ,
அரச காரியாலயங்களில் கடமையாற்றுபவர்களுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(05) நடமாடும் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலாய பணிப்பாளர் வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலாய பணிப்பாளர் ஊடகங்களுக்கு நேற்று(02) இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“மட்டக்களப்பில் நான்காவது கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு பூராகவும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகார பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் 67 வயதுடைய ஒருவருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் 4ஆவது கோவிட் தடுப்பூசி கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5ம் திகதி கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடமாடும் சேவை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயம், மாவட்ட செயலகம், மாநகரசபை மற்றும் மண்முணை வடக்கு பிரதேச செயலாளர் காரியாலயங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது
மேலும் மூன்றாவது தடுப்பூசி ஏற்றாதவர்கள் மற்றும் முதலாவது தடுப்பூசி ஏற்றுபவர்கள், நோயாளர்கள் போன்றோருக்கு இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
அதேவேளை பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறும், தடுப்பூசி ஏற்றாதவர்கள் தடுப்பூசியை சுகாதார பிரதேச காரியாலயத்தில் சென்று ஏற்றிக்கொள்ள முடியும்’’ என தெரிவித்துள்ளார்.
0 comments: