0 3-08-2022.*,, ,
புதிய புகையிரத பொது முகாமையாளராக நிதி அமைச்சில் திட்டமிடல் பணிப்பாளராக பணியாற்றிய டபிள்யூ.பீ. எஸ். ஈ. பி. குணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக நிஷாந்த வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர் நாளை (4) பதவியேற்க உள்ளார்.
பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பத்து வயதான சிறுமி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு, முகம் மறைக்கப்பட்டு மரம் ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
வெள்ளவத்தை-டபிள்யு.ஏ.டி.சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் பெறுவதற்காக புத்தளம் நகரப் பகுதியில் காத்திருந்த 63 வயதான நபரொருவர் அதிகாலை வரிசையில் காத்திருக்கும் நிலையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் முதலாவது கப்பல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 12 மற்றும் 14 ஆம் திகதிகளுக்கு இடையில் நாட்டை வந்தடையவுள்ளது.
0 comments: