இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினர், நாட்டில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையும், புதிய பிரதமர் தினேஸ் குணவர்தன அவர்களையும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மலையக பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைகளை எடுத்துக்கூறி அதற்கான நிவாரண உதவிகளை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம் .
மேலும் மலையக பகுதிகளுக்கு எரிபொருள் விநியோகத்தை அதிகரிப்பது, கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, சுயதொழில் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் எதிர்வரும் காலங்களின் தேர்தல் சீர்திருத்த விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து ஜனாதிபதியால் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது. மேலும் மலையக மக்கள் தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக சாதகமாக பரீட்ச்சிப்பதாக அவர் குறிப்பிட்டார் .
- ஊடகப் பிரிவு -
0 comments: