0 3-08-2022.
01. இலங்கையின் 9ம் நாடாளுமன்றின் மூன்றாம் அமர்வுகள் தற்போது வைபவ ரீதியாக ஆரம்பமாகியுள்ளது.
02. அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் வரைவு வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
03. ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
04. நாட்டில் அரிசி, மா, சீனி, பருப்பு, நெத்தலி கருவாடு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.டி கொடிகார தெரிவித்துள்ளார். மேலும், அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு ஏற்ப மீள் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
05. எரிபொருள் வழங்கமை காரணமாக 120 மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர். கெஸ்பேவ முதல் – புறக்கோட்டை வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தனியார் பஸ் ஊழியர்கள் இவ்வாறு பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடுட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
0 comments: