புலம்பெயர் மக்களிடமிருந்து இலங்கைக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ள விசேட புலம்பெயர்ந்தோர் காரியாலயமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார சிக்கலில் சிக்குண்டுள்ள நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இந்த நடவடிக்கை அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பணிக்குழாம்மட்ட ஒப்பந்தம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், அந்த உடன்படிக்கை இலங்கைக்கு சிறந்த நம்பிக்கையைக் கொடுக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

0 Comments