ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருவதற்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும்,ஆசிரியர்களுக்கு சில சலுகைத் திட்டம் தேவை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற பாடசாலைகளை விட,புற நகர் பாடசாலைகளுக்கு மாணவர்கள்,ஆசிரியர்கள் வருவதில் கடும் சிரமம் ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கு மட்டும் அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிலமையின் தீவிரத் தன்மையை புரிந்து கொள்வதற்கு மாகாணங்களுக்கு வரவேண்டும்.எனவும் அண்மையில் புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது இந்த நிலமையை நங்கு புரிந்து கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாக பாடசாலைலுகளை நடத்துவதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 comments: