சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் (சவுதியா) விமானத்தில் மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கு வந்தவுடன் தனது பதவி விலகலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-
மேலும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சற்றுமுன்னர் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்சே மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று இரவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலேயில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தனர்.
எனினும் பாதுகாப்பு காரணங்களால் பயணிகள் விமானத்தில் திட்டமிட்டபடி சிங்கப்பூர் பயணம் பிற்போட்டப்பட்டது.
மாலைதீவில் இருந்து புறப்படுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ ஒரு தனியார் ஜெட் விமானத்தை கோரியிருந்தார் என்றும் இது தொடர்பில் மாலைதீவு அதிகாரிகள் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இன்று முற்பகல் மாலைதீவின் வெலனா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதி எயார்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி பயணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் ஜனாதிபதி இன்று சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments: