ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேற காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
போராட்டம் வேறு வகையில் திசை திரும்புவதனை தவிர்க்க வேண்டும் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் ஊடவியலாளர் சந்திப்பு ஒன்றை சற்று முன்னர் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் இல்லத்தை சுற்றிவளைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள நிலையில் அங்கு சென்ற ஒரு குழுவினரால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இனினும் இவ்வாறு தொடர்ந்தால் நாட்டின் நிலைமை மிகவும் பயங்கரமானதாக மாறிவிடும். எனவே தாங்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது ஒரு சமாதானமான போராட்டமாக காணப்பட வேண்டும். வன்முறை எங்கள் நோக்கமல்ல. எனினும் கோட்டாபய மற்றும் ரணிலை விரட்டும் வரை எங்கள் போராட்டம் முடிவுக்கு வராதென ஆர்ப்பாட்ட ஏற்பட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments: