மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் நீண்ட நாட்களாக வீடுகளை உடைத்துக் கொள்ளையடித்து வந்த 24 வயது இளைஞனை, நேற்றிரவு (18) கைதுசெய்துள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையிடப்பட்ட எரிவாயு வெற்றுச் சிலிண்டர் – 6, தங்கஆபரணங்கள், சிடி பிளோயர், 6,500 ரூபாய் பணம் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியன இளைஞனிடமிருந்து மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments: