நாட்டிற்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வந்தடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமை போல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடாக தேசிய எரிபொருள் வழங்கல் அட்டையும் தற்போது இணையம் ஊடக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், எரிபொருள் வழமைக்குத் திரும்பினால் பொதுப் போக்குவரத்திற்கான கட்டணங்களையும் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்றைய தினம் அறிவித்திருந்நதார்.
குறைந்த தூரத்திற்கான கட்டண அறவீடு
இவ்வாறான நிலையில், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பேருந்து கட்டணம் 2.23% குறைக்கப்படவுள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயில் இருந்து 38 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏனைய கட்டணங்களும் நள்ளிரவு முதல் 2.23% குறைக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 Comments