Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சஜித் பிரேமதாசவை சந்தித்தனர் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் !

 


காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஜூலை 18 திங்கட்கிழமை சந்தித்தனர்.

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே காலி முகத்திடல் போராட்டக்கார்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே இன்று எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்ததாகவும் போராட்டக்கார்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் முன்வைக்கும் ‘செயற்திட்டத்தை’ எதிர்காலத்தில் எந்த அரசாங்கமும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர்கள் எதிர்க்கட்சி தலைவருக்கு வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments