இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான மக்கள் போராட்டம், பாசிச புரட்சியாக மாற இடமளிக்கப்படமாட்டாது என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர், பாதுகாக்க போராடும் நாட்டை அழிக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக நடந்த கலவரங்களாலும் போராட்டங்களாலும் ஒரு நாடாக நாம் அனுபவித்த துன்பங்களை நீங்களும் நானும் அனுபவத்தில் அறிவோம்.
அத்தகைய சகாப்தத்தை மீண்டும் உருவாக்க நீங்கள் போராடவில்லை. பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து நான் பின்வாங்கமாட்டேன் என அதில் தெரிவித்துள்ளார்.
0 Comments