பத்தரமுல்லை - தியத்த உயன பகுதியிலுள்ள நாடாளுமன்ற நுழைவு வீதிப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பெற்றோலிய வளங்களை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இந்த நிலையில் அப்பகுதியில் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதிகள், பத்தரமுல்லை - பொல்துவை சந்தி மற்றும் ஜப்பான் நட்புறவு வீதிக்கு அருகிலுள்ள பகுதி என்பன மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments: