(க.விஜயரெத்தினம்)
மருதமுனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பெரியநீலாவணை பொலிஸ் பிவுக்குட்பட்ட மருதமுனை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (4)காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தனிப்பட்ட வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒருவரை கல்முனையிலிருந்து -மட்டக்களப்புக்கு விரைந்து சென்ற தனியார் பஸ் விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர் வீதியில் கிடப்பதை கவனிக்காமல் சென்ற தனியார் பஸ்ஸை அங்கிருந்த பொதுமக்கள் கூக்குரலிட்டு குறித்த தனியார் பஸ்ஸை நிறுத்தியுள்ளதுடன்,விபத்தை ஏற்படுத்தியவரை கவனிக்காமல் தப்பிச்சென்றமை கண்டிக்கதக்க விடயமாகுமென அங்கு கூடியிருந்த பொதுமக்களால் பஸ்ஸீன் நடாத்துனரையும் எச்சரித்துள்ளதுடன் காயப்பட்டவரை வைத்தியசாலைக்கு அனுப்பி அவருக்கு சிசிச்சையளிக்குமாறு பொதுமக்கள் எச்சரித்தார்கள்.
இவ்விடயமாக பெரியநீலாவணை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
0 comments: