புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இலங்கையின் முழு வாக்காளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், மக்களின் இறைமை மற்றும் அவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தி இந்த பாரிய கடமையை செய்ய வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
எந்தவொரு தனிநபரின் அல்லது அரசியல் கட்சியின் தனிப்பட்ட அல்லது அரசியல் நலன்களின் அடிப்படையில் அல்ல, நாட்டின் நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதே காலத்தின் தேவை.
இலங்கை மேலும் குழப்பத்தில் மூழ்குவதைத் தடுக்கவும், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்” என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
0 Comments