Advertisement

Responsive Advertisement

முப்படையினரிடம் சரத் பொன்சேகா விடுத்துள்ள கோரிக்கை


நாட்டில் இன்று நடைபெறும் போராட்டங்கள் சம்பந்தமாக முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முப்படையினர் மற்றும் பொலிஸாரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

மக்களை நோக்கி துப்பாக்கிகளை திருப்ப வேண்டாம்

முப்படையினரின் உறவினர்கள், நண்பர்கள் இலங்கையில் வாழ்வதால், கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கும் அனைவருக்காகவும் இ்நத போராட்டம் நடத்தப்படுகிறது.

இதனால், மோசடியான அரசியல்வாதிகளை பாதுகாக்காது, மக்களை பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன். எந்த சந்தர்ப்பத்திலும் மக்களை நோக்கி துப்பாக்கிகளை திருப்ப வேண்டாம். கடந்த மே 9 ஆம் திகதி நடந்த வன்முறை மீண்டும் நடப்பதை பார்க்கும் அவசியம் எமக்கில்லை.

இலங்கை மக்களுக்கு நாட்டின் முக்கிய பிரமுகர்களால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்றால், முப்படையினர் அந்த முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்றி தம்முடன் இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது.

கட்சி சார்பற்றவனாக போராட்டத்திற்கு வருவேன்

முப்படையினரிடம் சரத் பொன்சேகா விடுத்துள்ள கோரிக்கை | Peoples Protest Request Fonseka Sl Forces

இலங்கையின் எதிர்கால சந்ததியை எண்ணிப்பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு முப்படையின் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

நான் கட்சி சார்பற்றவனாக இன்று நடைபெறும் போராட்டத்திற்கு வருவேன். என்னுடன் இணைந்துக்கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றேன் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments