Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் - தீவிரமடையும் கொழும்பின் கள நிலைமை

 


கொழும்பில் பதற்றம்

கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். 


அந்த பகுதியில் ஆயிரக்காண போராட்டக்காரர்கள் ஒன்றுகூடியுள்ளதுடன், வீதித்தடைகளை அமைக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ள போதும் அவற்றை தகர்த்து எறியும் முயற்சியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். 


இதேவேளை தற்போது கிடைத்துள்ள தகவலின்படி செத்தம் வீதிப்பகுதியில் காணப்பட்ட வீதித்தடைகளையும், பாதுகாப்பு படையினரையும் தாண்டி போராட்டக்காரர்கள் உள்நோக்கி நகர்ந்து வருவதாக தெரியவருகிறது. 

காலிமுகத்திடல் நிலவரம்

மேலும் கொழும்பு காலிமுகத்திடல் பகுதியிலும் பெருந்திரளானோர் திரண்டுள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கண்ணீர்ப்புகை தாக்குதல் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

Gallery

Post a Comment

0 Comments