Advertisement

Responsive Advertisement

9ம் திகதி மாபெரும் போராட்டம்: ஒட்டுமொத்த நாடுமே பற்றி எரியும் என எச்சரிக்கை

 


போராட்டம் என்ற பெயரில் வன்முறை

எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டத்தின் போது வாகனங்கள், வீடுகள் என்பவற்றைக் கொளுத்தி, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

போராட்டங்களை நாம் மதிக்கிறோம். ஆனால், இதுபோன்ற அரசியல் செயற்பாடுகளை போராட்டம் என கூற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று அதனூடாக ஆட்சியை கைப்பற்றுவதற்கே முயற்சிக்கப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

ஒட்டுமொத்த நாடுமே பற்றி எரியும்

9ம் திகதி மாபெரும் போராட்டம்: ஒட்டுமொத்த நாடுமே பற்றி எரியும் என எச்சரிக்கை | June9 Protests Warning Colombo

நாட்டு மக்களை வரிசைகளின் நிற்க வைக்கவே எதிர்க்கட்சி திட்டமிடுகிறது.

தலைக்கவசம் அணிந்தவர்கள் இந்த வரிசைகளுக்குள் சென்று வன்முறை சம்பவங்களை தூண்டுகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த தலைக்கவச குழுக்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

போராட்டத்தின் போது தலைக்கவசம் அணிந்த எவராவது எரிபொருள் நிரப்பு நிலையங்களை கொளுத்தினாலோ அல்லது வேறோர் இடங்களில் தீயை பற்ற வைத்தாலோ ஒட்டுமொத்த நாடுமே பற்றி எரியும் எனவும் எச்சரித்தார்.

Post a Comment

0 Comments