Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் நிலத்தைத் தோண்டி தங்கம் தேடிய 4 பேர் கைது !

 


மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி, ஒல்லிக்குளம் பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் தங்கம் தேடி நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் நேற்று (19) நள்ளிரவு கைது செய்யப்பட்ட இவர்கள், காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை தங்கு விடுதிக்கு அருகாமையிலுள்ள கைவிடப்பட்ட காணியை களவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினருடன் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இணைந்து முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு தங்கம் இருப்பதாக நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

அத்துடன், நிலத்தை தோண்ட பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு மற்றும் சவல் போன் உள்ளிட்ட ஆயுதங்களை மீட்டு, காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


Post a Comment

0 Comments