நாம் டலஸை போட்டியிடச் செய்தோம். நாமும் வாக்களித்தோம் ஆனால் தோல்வியடைந்துவிட்டார் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அதிக வாக்குகள் கிடைத்தமையால் ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற்றார். எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என தெரிவித்த அவர், எந்த அரசாங்கம் வந்தாலும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றார்.
இது மக்கள் ஆணை இல்லை என பலரும் கூறினாலும் எம்மை பொறுத்தவரை இதுதான் மக்கள் ஆணை என்றார்.
எனவே ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டங்கள் போதுமென்று தான் நினைப்பதால் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது இதனை புரிந்துகொண்டு அங்கிருந்து வெளியேறி உங்கள் தொழில்களை செய்யுங்கள் என தெரிவித்தார்.
0 comments: