நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் மறு அறிவித்தல் வரை வாரத்தின் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 3 தினங்களில் மாத்திரம் பாடசாலைகள் வழமையான நேர அடிப்படையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தோடு பாடசாலைகள் நடைபெறாத புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வீட்டிலிருந்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் அல்லது இணையத்தில் கற்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: